ஐநா மனித உரிமை பேரவை இலங்கை குறித்து ஒரு நிலைப்பாடு உக்ரைன் குறித்து வேறொரு நிலைப்பாடு – ரணில் சாடல்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பில் ஒரு நிலைப்பாட்டையும் உக்ரைன் தொடர்பில் வேறு ஒரு நிலைப்பாட்டையும் பின்பற்றுவதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் இது குறித்து தீவிர கவனம் செலுத்தவேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இலங்கை குறித்து செப்டம்பர் மாதம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானமொன்றை நிறைவேற்றவுள்ளதால் இது குறித்து இப்போதே இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அரசியல் மாற்றமடைந்துள்ளது,அமெரிக்கா உக்ரைன் ரஸ்ய யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு முயல்கின்றது, ரஸ்யர்கள் தங்கள் நோக்கங்களிற்காக தியாகம் செய்துள்ளனர் அவர்கள் நெப்போலியனை தோற்கடிப்பதற்காக தங்கள் தலைநகரத்தையே தீயிட்டவர்கள்.
பல ஐரோப்பிய தலைநகரங்கள் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி குறித்து மௌனமாக உள்ளன அவர் ஜனாதிபதி தேர்தலை நடத்தாது குறித்து மௌனமாக உள்ளன என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் மார்சல் சட்டம் நடைமுறையிலிருந்தால் தேர்தலை பொதுத்தேர்தலை நடத்தாமலிருக்கலாம் என அந்த நாட்டின் அரசமைப்பு தெரிவிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் அரசமைப்பு ஜனாதிபதி தேர்தல் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களின் போது பிரிட்டன் தேர்தல்களை பிற்போட்டது,பொதுச்சபை பிரபுக்கள் சபையின் ஆதரவுடன் இது இடம்பெற்றது.
விடுதலைப்புலிகள் வடக்கில் போரிட்டபோதும் ஜேவிபியின் கிளர்ச்சியின் காலத்திலும் நாங்கள் தேர்தல்களை நடத்தியுள்ளோம்,2024 இல் நாங்கள் தேர்தல்களை நடத்தினோம்ஜேவிபி தற்போது ஆட்சியில் உள்ளது,ஆனால் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவை இலங்கை இரட்டைநிலைப்பாடுகளை பின்பற்றுகின்றதுஇலங்கையை வேறுமாதிரி நடத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பகிரவும்...