ஏமன் துறைமுகத்தில் கடுமையான தீ பரவல்

இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை ஏமனின் ஹொதைதா துறைமுகத்தில் எண்ணெய் தொட்டிகள் மற்றும் மின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியது.
குறித்த தீயை கட்டுப்படுத்த தொடர்ந்து போராடி வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
கடுமையான தீ மற்றும் கரும்புகை வானை நோக்கி எழுந்த வண்ணம் இருப்பதாகவும் இதனைக் கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு வீரர்கள் சிறிய அளவே முன்னேற்றம் கண்டிருப்பதோடு தீ மேலும் பரவி வரும் நிலையில் அது உணவுக் களஞ்சிய வசதிகளை அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக இந்த எரிபொருள் கிடங்கை நடத்தும் யெமன் பெற்றோலிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் 80க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாக ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பாலஸ்தீனர்களுக்கு ஆதரவை வழங்கி வரும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு பதிலடியாகவே யெமன் மீது முதல் முறை பதில் தாக்குதலை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...