Main Menu

ஏப்ரலில் ஸ்டாரிலிங்க் இணையச் சேவை அறிமுகம்

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டபடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் ஸ்டாரிலிங்க் இணையச் சேவை வழங்கப்படும்  என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளதாவது,

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதும், ஸ்டாரிலிங்க் இணைய சேவையைப் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேற்பார்வை செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பு.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமும், பயனர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் செயல்முறையை சீராக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஸ்ட்ரீமிங், ஒன்லைன் விளையாட்டு, வீடியோ அழைப்புகள் மற்றும் பலவற்றை வழங்கும்  திறன் கொண்ட செய்மதி அகன்ற அலைவரிசை (broadband) இணைய சேவையை வழங்க, பூமியின் கீழ் சுற்றுப்பாதையைப் பயன்படுத்தும் உலகின் முதல் மற்றும் மிகப்பெரிய செயற்கைக்கோள் தொகுதியாக ஸ்டார்லிங்க் உள்ளது.

மேம்பட்ட செயற்கைக்கோள்கள் மற்றும் பயனர் வன்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம், விண்கலம் மற்றும் சுற்றுப்பாதையில் செயல்பாடுகளில் விரிவான அனுபவத்துடன், ஸ்டார்லிங்க் உலகெங்கிலும் உள்ள பயனர்களுக்கு அதிவேக, குறைந்த தாமத இணையத்தை வழங்குகிறது.

பகிரவும்...
0Shares