Main Menu

எமது அரசியல் ஆய்வாளர் திரு.ஹைதர் அலி அவர்கள் பிரதமர் ஹரிணி அமர சூரிய அவர்கட்கு எழுதிய வாழ்த்து மடல்

TRT தமிழ் ஒலி வானொலியின் அரசியல் ஆய்வாளர்களுள் ஒருவரான திரு.ஹைதர் அலி அவர்கள் இலங்கையின் புதிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமர சூரிய அவர்கட்கு தனது வாழ்த்தினை தெரிவித்து மடல் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். அம் மடலின் தமிழ் வடிவம் இங்கே தரப்பட்டுள்ளது

அன்புடன் கலாநிதி ஹரிணி அமர சூரிய அவர்கட்கு,

Caritas நிறுவனத்தில் தொழில் புரியும் பொழுது தங்களுக்கு கீழ் நான் பணி புரிந்திருக்கின்றேன், அதன் பின்பு நாம் இருவரும் யுனிசெப் நிறுவனத்தில் கடமையாறினோம். அப்போது அந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு நீங்கள் தலைமை வகித்தீர்கள், பின்பு கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் கீழ் இயங்கி வந்த Social Development Training Center ஊடாக நாடளாவிய ரீதியில் பல பயிற்சி பாசறைகளை நாம் ஒன்றிணைந்து நடாத்தி இருக்கின்றோம்,

அவ்வாறு என்னோடு ஒன்றிணைந்து பயணித்த ஒருவர் இன்று ஶ்ரீலங்காவின் அதி உயர் பதவிகளில் ஒன்றான பிரதமர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு இருக்கிறீர்கள் என்கின்ற செய்தி கேட்டவுடன் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.

உங்கள் தலைமையும், தொலைநோக்கு பார்வையும் இன்றைய சூழ்நிலையில் ஸ்ரீ லங்கா போன்ற ஒரு நாட்டுக்கு கட்டாயம் தேவைப்படுகின்றது. இன மத பேதமின்றி இந்த நாட்டை கட்டி எழுப்பும் நிகழ்வில் உங்களது பங்களிப்பு இன்றியமையாததாக இருக்கும் என்று நம்புகிறேன்.

வாழ்த்துகள்
ஹைதர் அலி

 

பகிரவும்...
0Shares