Main Menu

‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ – பேனர் வைத்த காரைக்குடி கிராம இளைஞர்கள்

காரைக்குடி அருகே ‘மக்கள் வாக்குகள் விற்கப்பட மாட்டாது, 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்வோம்’ என தங்கள் ஊரில் கிராம இளைஞர்கள் அறிவிப்பு பேனர் வைத்துள்ளனர்.

வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் தருவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆலம்பட்டு பெரியார் நகரில், ‘மக்கள் வாக்குகள் விற்கப்பட மாட்டாது.

100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்வோம்’ என ஊர் எல்லையில் ஆலம்பட்டு நற்பணி குழுவினர், தந்தை பெரியார் மறுமலர்ச்சி டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் பேனர் வைத்துள்ளனர்.

மேலும், இது தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டிக ளையும் பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்கூரை உள்ளிட்ட பொது இடங்களிலும் ஒட்டியுள்ளனர். இதுகுறித்து ஆலம்பட்டு பெரியார் நகர் இளைஞர்கள் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தில் அனைவரும் வாக்குக்கு பணம் வாங்க மாட்டோம் என முடிவு செய்துள்ளோம்.

அரசியல் கட்சியினர் பணத்தோடு வந்துவிடக் கூடாது என்பதற்காக, ஊர் எல்லையிலேயே அறிவிப்புப் பேனர் வைத்துள்ளோம்’ என்றனர்.