Main Menu

ஊழல் அரசியல் வாதிகளுக்கு மன்னிப்பு கிடையாது: அமைச்சர் ராமலிங்கம்

இலஞ்சம், மோசடி மற்றும் பொது சொத்துக்களை சூறையாடிய அரசியல்வாதிகளுக்கு மன்னிப்பு கிடைக்காது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஒருபோதும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்றும் அவர் கூறினார்.

யாழ். கொழும்புத்துறை இறங்குதுறையின் புனரமைப்பு பணிகளை நேற்று (18) ஆரம்பித்து வைத்த போது அமைச்சர் இதனைக் கூறினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கோலித்த கமல் ஜினதாச, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது உரையாற்றுய அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்,

கொழும்புத்துறை இறங்குதுறையை புனரமைக்குமாறு பல தரப்பினரும் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பில் அமைச்சரவையில் எடுத்துரைத்தேன்.

அரசாங்கமும் உடனடியாக இணங்கியது.

இதற்கான பணிக்கான 140 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல இன்றைய (நேற்று) தினம் உதயபுரம் வீதி புனரமைப்பு பணியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்காக 65 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பொருளாதாரப் பிரச்சினையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்தோம்.

தற்போது அபிவிருத்தி யுகம் ஆரம்பமாகியுள்ளது.

அடுத்து வரும் காலங்களில் அரசமைப்பு இயற்றல் உள்ளிட்ட பணிகள் இடம்பெறும் – என்றார்.

பகிரவும்...
0Shares