Main Menu

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்

உலகக் கிண்ணக் கால்பந்து தொடருக்கான தகுதிகாண் போட்டியில் விளையாடுவதற்காக ஈராக் தேசிய கால்பந்து அணி தனிப்பட்ட விமானம் மூலம் மெக்சிகோவிற்குப் பயணம் செய்யத் தீர்மானித்துள்ளது.

இருப்பினும், பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, இந்தப் பயணத்தைத் தள்ளிப்போடுமாறு அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ஆர்னால்ட் கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திட்டமிட்டபடி இந்தப் போட்டி இடம்பெற்றால், எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி மெக்சிகோவின் மொன்டேரே நகரில் பொலிவியா அல்லது சூரினாம் ஆகிய அணிகளில் ஒன்றுடன் ஈராக் மோதவுள்ளது.

இந்தத் தீர்க்கமான போட்டியில் வெற்றிபெறும் அணி, 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்து தொடருக்குத் தகுதி பெறும் என்பதால்,  இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது