Main Menu

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரை எனக்கு தெரியும் – ஞானசார தேரர்

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயற்பட்டவரை தமக்கு தெரியும் எனவும், ஜனாதிபதி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவர் தொடர்பில் அறிவிக்கவுள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (6) மல்வத்து – அஸ்கிரிய பீடாதிபதிகளை தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நான் இதை பொறுப்புடன் சொல்கிறேன். மூளையாகச் செயல்பட்டவர் யார் என்பது எனக்குத் தெரியும்.

ஆனால் நான் அதை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த மாட்டேன்.

ஜனாதிபதிக்கும் நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களுக்கும் அறிவிப்பேன்,” என்று தேரர் இதன்போது கூறினார்.

பகிரவும்...