Main Menu

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறைவடைந்த மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாதவாறு  நடந்து கொள்ளுங்கள் – வைத்தியர்கள்  கோரிக்கை

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறைவடைந்த மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் விதமாக  நடந்து கொள்ள வேண்டாம் என வைத்தியர்கள் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயர்தரப் பரீட்சை என்பது வெறுமனே மற்றுமொரு  பரீட்சை மாத்திரமே. இவற்றில் தோல்வி அடைந்தால் எதிர்கால செயற்பாடுகள் தடைப்படும்  என எண்ணக்கூடாது. முதலில் பெற்றோர் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக செயற்படுவதை நிறுத்த வேண்டும். அவ்வாறானவர்களுக்கு சிறந்த மன தைரியத்தை வழங்க வேண்டும்.

அனுபவமிக்க ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு மாணவர்களை அடுத்த படிக்கு தயார்படுத்த வேண்டும் அல்லது  மீள பரீட்சைக்கு தயார்படுத்த வேண்டும்.நவம்பர் மாதம் அடுத்த பரீட்சை நடைபெற உள்ள நிலையில் ஐந்து மாதங்கள் வரையான காலப்பகுதி அவகாசம் உள்ளமையினால் அந்தக் காலத்தை உரிய விதத்தில் பயன்படுத்தினால் பரீட்சையை சிறப்பாக எதிர்கொள்ள முடியும்.

மனதில் அழுத்தங்கள் காணப்பட்டால் அருகில் உள்ள வைத்தியர் ஒருவரிடம் பிள்ளைகளை காண்பியுங்கள். 1926 என்ற தேசிய மனநல நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.பரீட்சை பெறுபேறுகள் சிறப்பாக இல்லாவிட்டால் மாணவர்களுக்கு வழங்குவதனால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை கூட ஏற்படலாம். 

எனவே அதனை சிந்தித்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் செயல்பட வேண்டும் என்றும் வைத்தியர்கள்  கோரி உள்ளனர்.

பகிரவும்...