Main Menu

உக்ரேனிய துருப்புக்களால் பணயக் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டுள்ள வட கொரிய சிப்பாய்கள்

ரஷ்யாவின் குர்ஸ்க் – ஒப்லாஸ்டில் பகுதியிலிருந்து காயமடைந்த நிலையில் 2 வட கொரிய சிப்பாய்கள், யுக்ரேனிய துருப்புக்களால் பணயக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தமது எக்ஸ் தளத்தின் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இருவருக்கும் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் கியேவில் உள்ள யுக்ரைன் பாதுகாப்பு சேவை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யுக்ரைனுக்கு எதிரான போரில் வட கொரியா ஈடுபட்டதற்கான ஆதாரத்தை அழிப்பதற்காக , காயமடைந்த வட கொரிய சிப்பாய்களை ரஷ்ய மற்றும் வட கொரிய படையினர் வழக்கமாகக் கொலை செய்வார்கள் எனவும் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

சிறைப்பிடிக்கப்பட்ட இருவரின் படங்களை வொலோடிமிர் ஸெலென்ஸ்கி பகிர்ந்துள்ள போதிலும், அவர்கள் வட கொரியர்கள் என்பதற்கான ஆதாரங்கள் எவையும் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...