Main Menu

ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கிச் சரமாரி ஏவுகணைத் தாக்குதல்

இன்று (05) அதிகாலை ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கிப் பல ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்கள் காரணமாக எவ்வித உயிர்ச்சேதங்களும் இதுவரை பதிவாகவில்லை என அந்நாட்டு அவசரப் பிரிவினரை மேற்கோள்காட்டி AFP செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்குள் தொடர்ச்சியாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதுடன், ஜெருசலேம் நகரில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.