இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை அழைத்துவர விசேட அதிரடிப்படை வீரர்கள் நேபாளம் பயணம்

‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான ‘இஷாரா சேவ்வந்தி’ உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக ஏற்கனவே நேபாளத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு குழுவிற்கு உதவ இரண்டு பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) பணியாளர்கள் நேபாளம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (15) மாலை நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கணேமுல்ல சஞ்சீவ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த தப்பியோடிய பெண் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேற்று (14) நேபாள தலைநகர் கத்மண்டூவுக்கு அருகில் கைது செய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நேபாள பொலிஸார் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ‘கெஹல்பத்தர பத்மே’வின் நெருங்கிய நண்பரும் ஒருவர் ஆவார்.
பகிரவும்...