இளையராஜாவின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் குதூகலிக்கும் இரசிகர்கள்

இசையமைப்பாளர் இளையராஜா தனது அடுத்த சிம்பொனி இசையில், “சிம்பொனிக் டான்சர்ஸ்” என்ற இசைக்கோர்வையை புதிய படைப்பாக எழுதவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகைத் தாண்டி ஒட்டுமொத்த இந்தியா சினிமாவையும் தனது இசையால் ஈர்த்தவர் இளையராஜா. 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து புதிய சாதனை படைத்தார்.
இந்த நிலையில், தீபாவளி திருநாளில் இளையராஜா புதிய அறிவிப்பைக் காணொளியாக வெளியிட்டு இரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில், “எனது அடுத்த சிம்பொனியை, அம்மாவின் நினைவு தினத்தை முடித்து விட்டு வந்து ஆரம்பிக்கலாம் என இருக்கிறேன். இத்துடன் புதிய படைப்பாக ‘சிம்பொனிக் டான்சர்ஸ்’ என்ற இசைக்கோர்வையை எழுதுவதாக இருக்கிறேன். இதை உங்களுக்குத் தீபாவளி நற்செய்தியாக சொல்கிறேன். நன்றி வணக்கம்” எனக் கூறியுள்ளார்.
இளையராஜா வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, இரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பகிரவும்...