Main Menu

இலங்கை – சிம்பாப்வே; டி:20 தொடரின் முதலாவது போட்டி இன்று

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி, இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 05.00 மணிக்கு ஹராரேவில் தொடங்கவுள்ளது.

ஒருநாள் போட்டியில் மோசமான பந்துவீச்சாளர்களால் சிறப்பாக விளையாட முடியாமல் போன நிலையில், சிம்பாப்வே அணி, வெற்றிப் பதையில் திரும்பும் நோக்குடன் இந்த ஆட்டத்தில் களமிறங்க ஆர்வமாக உள்ளது.

அதேநேரம், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம் இலங்கை நம்பிக்கையுடன் ஆட்டத்தில் நுழைகிறது.

அந்த தொடரில் பத்தும் நிஸ்ஸங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

2025 ஆசியக் கிண்ணம் நெருங்கி வரும் நிலையில் இந்த ஆட்டமானது இலங்கை அணிக்கு நல்லதொரு ஆயத்தமாக அமையவுள்ளது.

சிம்பாப்வே மற்றும் இலங்கை இதுவரை ஆறு டி20 போட்டிகளில் மட்டுமே மோதியுள்ளன.

அதில் இலங்கை 05 போட்டிகளிலும், சிம்பாப்வே ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

பகிரவும்...
0Shares