Main Menu

இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் முறைமையின் மூலம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று (1) பல்லேகலையில் இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

இன்றைய போட்டியில் இலங்கை அணி இரண்டு முக்கிய மாற்றங்களுடன் களமிறங்கியது.

தனஞ்சய டி சில்வா மற்றும் மஹீஸ் தீக்ஸனவுக்கு பதிலாக பவன் ரத்நாயக்க மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் பவன் ரத்நாயக்க அதிகபட்சமாக 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

அதன்படி இங்கிலாந்து அணி 190 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய நிலையில் 2 விக்கெட்டுக்களை இழந்து 57 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழைக்காரணமாக போட்டி தடைப்பட்டது.

இதனால் இந்த போட்டியானது 17 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணிக்கு 168 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி 58 பந்துகளில் 111 ஓட்டங்கள் இங்கிலாந்து அணிக்கு வெற்றிக்காக தேவை என்ற நிலையில் மீண்டும் போட்டி ஆரம்பமானது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி 16.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.

குறித்த வெற்றியின் ஊடாக இங்கிலாந்து அணி 2-0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிப்பதுடன், தொடரையும் கைப்பற்றியுள்ளது.