Main Menu

இலங்கையின் முன்னேற்றத்துக்குத் தொடர்ந்தும் ஆதரவு – அமெரிக்கத் தூதுவர்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கத் தூதுவர் தமது எக்ஸ் தளத்தில் இந்த சந்திப்பு குறித்துத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் போன்ற விடயங்களில் இணைந்து பணியாற்றுவதற்கும் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேசிய ஒருமைப்பாடு, நீதி மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை நோக்கிய இலங்கையின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்க அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...
0Shares