Main Menu

இலங்கைக்கு பரிசாக வழங்கிய யானைகளை மீண்டும் திரும்பப் பெற தாய்லாந்து நடவடிக்கை

தாய்லாந்து பரிசாக வழங்கிய இரண்டு யானைகளை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்காக தாய்லாந்து அரசாங்கம் இலங்கையுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இலங்கையில் குறித்த யானைகள் மேசமாக பராமறிக்கப்படுவதாகவும், தவறாக நடத்தப்படுவதாகவும் வெளியான செய்திகளைத் தொடர்ந்து அவற்றை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வர தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

தாய்லாந்து யானைகளான  Plai Pratu Pha மற்றும் Plai Srinarong ஆகியவற்றின் நலன் குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான Suchart Chomklin வியாழக்கிழமை (23) தனது முகநூல் பக்கத்தில் அவசரமாக இலங்கைக்கு விமானத்தில் செல்ல திட்டமிட்டுள்ளதாக பதிவிட்டார்.

கடந்த ஆண்டு தாய் யானை மீட்புக் குழுவால் இந்த கவலைகள் முதலில் வெளிப்படுத்தப்பட்டன.

தாய்லாந்தால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட யானைகள், அதிகமாக வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டு, சரியான வாழ்க்கைத் தரங்கள் இல்லாமல் உள்ளன என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.

விலங்குகள் எல்லா நேரங்களிலும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்காக அவை உடனடியாக தாய்லாந்திற்குத் திரும்ப வேண்டும் என்று அந்தக் குழு வலியுறுத்தியது.

Thai elephants in Sri Lanka

இந்த நிலையில் இது தொடர்பான நேற்றைய முகநூல் பதிவில் தாய்லாந்தின் பிரதிப் பிரதமர், யானைகளின் நிலைமையினை பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மற்றும் பிற தாய்லாந்து அரசு நிறுவனங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இந்தப் பிரச்சினையைப் புறக்கணிக்கவில்லை என்றும் விளக்கினார்.

யானைகளை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுடனும் ஒருங்கிணைக்க இராஜதந்திர முயற்சிகளுக்கு ஒப்புதல் அளித்த பிரதமர் அனுடினுடன் இந்த விடயத்தைப் பற்றி விவாதித்ததாகவும் கூறினார்.

எனினும், இந்த செயல்முறைக்கு சிறிது நேரம் ஆகலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுடன் இணைந்து யானைகளின் உடல்நலம் குறித்து மதிப்பிடுவதற்காக இலங்கைக்கு செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யானைகளை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான இராஜதந்திர விவாதங்கள் தொடரும் வரை, உள்ளூர் பராமரிப்பாளர்கள் அவற்றுக்கு முறையான பராமரிப்பை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பிரதமர் Suchart Chomklin தெளிவுபடுத்தினார்.

பகிரவும்...
0Shares