Main Menu

இலங்கைக்குள் விசாரணை தீர்வை தராது

செம்மணி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நீதியை நிலைநாட்டுவதற்கு சர்வதேச விசாரணையே அவசியமாகவுள்ளதென வலியுறுத்தினார்.
பல வருடங்களாக விசாரணை உள்ளிட்ட அரச செயற்பாடுகளில் அரசியல் தலையீடு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே. இந்த விடயங்களில் அரச தரப்பின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்தநிலையில்,குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்ற தரப்பினரே, எவ்வாறு? தமக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இவ்வாறான விடயங்களில் அரச நிறுவனங்கள் இதுவரையில் சுயாதீனமாக இயங்கியதில்லை.
எனவே, இலங்கைக்குள் விசாரணைகளை நடத்தி தீர்வை பெற முடியும் என்று அரசாங்கம் நினைக்குமாயின்,அது கனவாகவே அமையும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...