Main Menu

இரண்டாவது நாளாகவும் தொடரும் யாழ் பல்கலை மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் இன்று இரண்டாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்கலைக்கழக முன்றிலில் இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பகிரவும்...