Main Menu

இம்ரான் கானுக்கான முறையான சிகிச்சையை வலியுறுத்தி 14 முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள் கடிதம்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள 73 வயதான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கடுமையான அச்சங்கள் நிலவி வரும் நிலையில், ஐந்து டெஸ்ட் அணிகளைச் சேர்ந்த பதினான்கு முன்னாள் சர்வதேச கிரிக்கெட் தலைவர்கள் அவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் கிரெக் சேப்பல் வரைந்து இன்று (17) பிற்பகல் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் வழங்கப்பட்ட இது தொடர்பான மனுவில் முன்னாள் இந்திய அணித் தலைவர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் கபில் தேவ் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்த கடிதத்ல் அவர்கள், 1992 உலகக் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் தலைவர் இம்ரான் கானின்

உடல் நிலை தொடர்பான அண்மைய செய்திகள் – குறிப்பாக காவலில் இருந்தபோது அவரது பார்வை மோசமடைந்தது  மற்றும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் சிறையில் அடைக்கப்பட்டதன் நிலைமைகள் எங்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் இம்ரானின் நிலை மோசமடைந்து வருவதாக அண்மையில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, கிரெக் சாப்பல் இந்த மனுவை எழுதி கிரிக்கெட் உலகம் முழுவதிலுமிருந்து ஆதரவைக் கோரினார்.

ஊழல் குற்றச்சாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் சிறையில் அடைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.