Main Menu

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்வதில்லை – எரிபொருள் விநியோகத்தர்கள்

எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்யும் நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

தற்போது கையிருப்பில் உள்ள பெட்ரோலியப் பொருட்களை மட்டுமே விநியோகிப்பதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் எரிபொருள் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு எந்த கொள்வனவு கட்டளைகளையும் வழங்கமாட்டோம் என்று எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் கூறியுள்ளது.

பகிரவும்...