Main Menu

இன்று தங்காலை காவல்துறையில் முன்னிலையாக முடியாது – விமல் வீரவன்ச

தங்காலை காவல் நிலையத்தில் இன்று முன்னிலையாக முடியாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் தனக்கு மற்றொரு திகதியை வழங்குவதற்கு இணங்கியதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று தங்காலை காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
அண்மையில் கைது செய்யப்பட்ட புவக்தண்டாவே சானா என்ற நபரின் அரசியல் தொடர்புகள் குறித்து, விமல் வீரவன்ச வெளிப்படுத்திய உண்மைகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
தங்காலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் குவியலை நாட்டிற்குக் கொண்டு வந்தமை தொடர்பில், அண்மையில் கைது செய்யப்பட்ட புவக்தண்டாவே சானா எனப்படும் சனத் வீரசிங்கவின் அரசியல் தொடர்புகள் குறித்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடந்த 2 ஆம் திகதி தகவல் ஒன்றை வெளியிட்டார்.
அதன்படி, விமல் வீரவன்ச வெளிப்படுத்திய உண்மைகள் குறித்து வாக்குமூலம் பெற இன்று தங்காலை காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் எமது செய்திச் சேவை வினவிய போது, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்று மதியம் தொடர்புடைய அழைப்பாணை அறிவிப்பைப் பெற்றதாகக் கூறினார்.
அதன்படி, இன்று தங்காலை காவல்துறையில் முன்னிலையாக முடியாது என அறிவிக்கப்பட்டதன் பின்னர், வேறொரு திகதி வழங்க காவல்துறை இணங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பகிரவும்...
0Shares