இனி செம்மணி போன்ற பேரவலம் நடக்காது – அரசாங்கம்

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி பேரவலத்தை போல, மீண்டும் நாட்டில் எவ்வித சம்பவங்களும் இடம்பெறக்கூடாது என, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிரிசாந்தி குமாரசுவாமிப் போன்று எந்த ஒரு பிள்ளையும் இனிமேல் பாதிக்கப்படக்கூடாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நிறைவடைந்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
செம்மணி படுகொலை தொடர்பில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி, விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விடயத்தில் நீதியைப் பெற்றுக் கொடுக்கும் என, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.