Main Menu

இனப் பிரச்சினை தீராமல் பொருளாதாரம் வளர்ச்சி அடையாது

76 வருடங்களாக நாட்டில் தீர்க்கப்படாமல் உள்ள சிறுபான்மை இனத்தவர்களின் பிரச்சினைகள் , அவர்களுக்கு நடைபெற்ற அநியாயங்கள், அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய உரிமைகள், தொடர்பாக இதுவரை எவராலும் பேசப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
நாட்டிற்கு சிறந்த ஒரு வளர்ச்சி தேவையென்றால் முதலில் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று நிச்சயம் கிடைக்க வேண்டும் .
வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கான தீர்வை மறந்து பொருளாதார ரீதியாக வளர்ச்சியை காண வேண்டும் என நினைப்பது வெறும் கனவாகவே இருக்கும் என அவர் தெரிவித்தார்.
பல இன மக்கள் இந்த நாட்டில் வாழ்கின்றனர்.
அவர்களுடைய அபிலாசைகள், தேவைகள் என்பவற்றை நாம் பூர்த்தி செய்ய வேண்டும்.
அவர்களுடைய உரிமைக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும்.
தேசிய கீதத்தில் சொல்லப்படும் ஒரு தாய் பிள்ளைகள் என்ற கருத்தை நடைமுறையில் கொண்டுவர வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பகிரவும்...