இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக அரசு புதிய சட்டமூலம்

இந்தி திணிப்பை தடை செய்யும் நோக்கில், தமிழக அரசு இன்று சட்டமன்றத்தில் ஒரு சட்டமூலத்தை தாக்கல் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து விவாதிக்க சட்ட வல்லுநர்களுடன் நேற்று இரவு அவசர கூட்டம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த சட்டமூலம் தமிழ்நாடு முழுவதும் இந்தி விளம்பரப் பலகைகள், திரைப்படங்கள் மற்றும் பாடல்களைத் தடை செய்ய முயல்கிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சட்டமூலம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த திரவிர முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், “அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். அதை நாங்கள் கடைப்பிடிப்போம், இந்தி திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறியுள்ளார்.
எனினும், பாரதிய ஜனதா கட்சியின் வினோஜ் செல்வம் திமுகவின் இந்த நடவடிக்கை “முட்டாள்தனமானதும் அபத்தமானதும் என்று விபரித்துள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 2025–26 மாநில வரவுசெலவுத் திட்ட இலட்சனையில் தேசிய ரூபாய் சின்னத்தையும் திமுக அரசு தமிழில் மாற்றியது.
இந்த மாற்றீடு பாஜக தலைவர்களிடமிருந்தும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமிருந்தும் விமர்சனங்களைத் தூண்டியமையும் குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...