Main Menu

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் அமீர் கான் முத்தாகி சந்தித்துள்ளார்.

அமீர் கான் முத்தாகி ஒரு வார கால உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா சென்றடைந்துள்ளார். இந்தியாவில் 16 ஆம் திகதி வரை தங்கி இருப்பார்.

2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், தாலிபான் பிரதிநிதி ஒருவர் இந்தியாவுக்கு செல்வது இதுவே முதல் தடவை ஆகும்.

டெல்லியில் இரு நாட்டு உறவுகள், புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தையை அவர் ஆரம்பித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆப்கன் அமைச்சர் முத்தாகி இன்று வெள்ளிக்கிழமை (10) கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இதில் உரையாற்றிய ஜெய்சங்கர்,

ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது.

எங்களுக்கிடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு உங்கள் தேசிய வளர்ச்சிக்கும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் பங்களிக்கிறது.

அதை மேம்படுத்துவதற்காக, காபூலில் உள்ள இந்தியாவின் தொழில்நுட்ப பணியகத்தை இந்திய தூதரக அந்தஸ்துக்கு மேம்படுத்துவதை இன்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான நீடித்த நட்பை உறுதிப்படுத்துவதிலும், நமது உறவுகளை முன்னேற்றுவதிலும் உங்கள் வருகை ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது.

கடந்த மாதம் ஆப்கனில் பூகம்பம் ஏற்பட்ட க சில மணி நேரங்களுக்குள் போது இந்தியா நிவாரணப் பொருட்கள் பூகம்பம் ஏற்பட்ட இடங்களுக்கு வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் பங்களிக்க விரும்புகிறோம்.

இரு நாடுகளும் எதிர்கொள்ளும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலால் நமது வளர்ச்சி ஆபத்தில் உள்ளது. பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை நாம் ஒருங்கிணைக்க வேண்டும்.

இந்தியாவின் பாதுகாப்பு கவலைகள் குறித்த உங்கள் நிலைப்பாட்டை நாங்கள் பாராட்டுகிறோம். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு எங்களுடன் நீங்கள் காட்டிய ஒற்றுமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் சுரங்க வாய்ப்புகளை ஆராய இந்திய நிறுவனங்களுக்கு நீங்கள் விடுத்த அழைப்பும் மிகவும் பாராட்டத்தக்கது. இரு நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்தும் நாம் விவாதிப்போம். மேலும் காபூலுக்கும் புது டெல்லிக்கும் இடையே கூடுதல் விமானங்கள் தொடங்கப்பட்டதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...
0Shares