இந்திய மானிய உதவியுடன் கட்டப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் மகாத்மா காந்தி மாதிரி கிராமத்தின் திறப்பு விழா
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க ஆகியோர் இணைந்து நேற்று அம்பாறையில் உள்ள மகாத்மா காந்தி மாதிரி கிராமத்தை 24 பயனாளி குடும்பங்களுக்கு திறந்து வைத்து கையளித்தனர்.
வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் கௌரவ டி.பி. சரத்; கிராமப்புற மேம்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ; மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியந்த விஜேரத்ன ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கெடுத்தனர்.
பகிரவும்...
