Main Menu

இந்திய மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசிய பிரித்தானிய முன்னாள் பிரதமர்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் பிரித்தானிய முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பிரித்தானிய பிரதமர் கெயிர் ஸ்டார்மர் அண்மையில் இந்திய சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட நிலையில்
பிரித்தானிய முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசியுள்ளார்.

ரிஷி சுனக்குடனான சந்திப்பு மகிழ்ச்சி அளித்ததாகவும் இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் ரிஷி சுனக்குடனான சந்திப்பு குறித்து மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது x தலத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, பிரித்தானிய முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் பதவி காலத்தில் இந்தியா – பிரித்தானியா இடையே நெருக்கமான உறவு நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares