Main Menu

இந்தியா செல்லவுள்ள பிரதமர் ஹரிணிக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்க நடவடிக்கை?

எதிர்வரும் அக்டோபர் மாத மத்தியில் இந்தியாவுக்கு செல்லவுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்க டெல்லி பல்கலைக்கழகம் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1991 முதல் 1994 வரை டெல்லியிலுள்ள இந்து கல்லூரியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய சமூகவியல் பயின்றிருந்தார்.
அவர் கல்வி பயின்ற டெல்லியிலுள்ள இந்து கல்லூரியிலே அவருக்கு கலாநிதி பட்டம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 17-18 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்த பட்டமளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...
0Shares