இந்தியாவில் ஜெய்ப்பூர் வைத்திய சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 நோயாளர்கள் உயிரிழப்பு

இந்தியாவின், ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் அரசாங்கத்திற்கு சொந்தமான சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 8 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த வைத்தியசாலையின், களஞ்சிய பகுதியில் தீ விபத்து ஏற்பட்டபோது 11 நோயாளர்கள் நியூரோ அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிக்ச்சை பெற்று வந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தீ விபத்துக்கு ஒரு சந்தேகத்திற்குரிய மின் கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பல்வேறு ஆவணங்கள், அதிதீவிர சிகிச்சை பிரிவு உபகரணங்கள், இரத்த மாதிரி குழாய்கள் மற்றும் அப்பகுதியில் சேமிக்கப்பட்டிருந்த பிற பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.
வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் நோயாளர் உதவியாளர்கள் இணைந்து ஏனைய நோயாளர்களை தீ பரவும் பகுதியிலிருந்து வெளியேற்றினர்.
தீயணைப்பு குழுவினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பகிரவும்...