Main Menu

இந்தியாவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு!

இந்தியாவில் இணைய குற்றங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டில் மாத்திரம் 50 ஆயிரத்து 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய ஆண்டை விட 11.8 சதவீதம் அதிகமாகவுள்ளதாகவும் தேசிய குற்றப் பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

இவற்றில் 578 வழக்குகள் சமூக ஊடகங்களில் போலியான செய்திகளை வெளியிட்டமைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 972 வழக்குகள் பெண்கள் மற்றும் குழந்தைகளை சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இணையவழியில் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

போலியான சுயவிபரப் பதிவு தொடர்பாக 149 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் இணையவழியில் தகவல் திருட்டு தொடர்பாக 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும்...