Main Menu

இந்தியாவின் கோவாவில் பிரபல விடுதியொன்றில் தீப்பரவல் – 25 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் கோவாவின் கடலோரப் பகுதியில் உள்ள பிரபலமான இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கோவாவின் அர்போராவில் உள்ள விடுதியில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன .

இதேவேளை சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடுதியின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து சம்பவித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதன்போது பாதிக்கப்பட்ட மேலும் அறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிரவும்...