ஆண்டு வருமானமாக 12 லட்சம் ரூபாவினை பெறுபவர்களுக்கு வரிவிலக்கு
இந்தியாவின் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் ஆண்டு வருமானமாக 12 லட்சம் ரூபாவினை பெறுபவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
2025-26 ஆம் ஆண்டுக்கான பாதீட்டி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக இதனை அறிவித்தார்.
அதேநேரம், 12 லட்சம் ரூபாவுக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு முதல் நான்கு இலட்சம் ரூபாவுக்கு வருமான வரி அறவிடப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில், இந்த வருமான வரி வரம்பு 7 லட்சம் ரூபாய் என்ற அளவில் உயர்த்தப்பட்டிருந்தது.
தற்போது, இது அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் வரி செலுத்துவது கணிசமாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, 2026-ம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 முதல் 6.8 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைவதற்கான விதிகள் தொடர்பிலும் இந்த பாதீட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.