Main Menu

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை? – இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்கப் போவதில்லை – நீதிமன்ற ஆயம்

இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (2) அனுமதி வழங்கியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மாயாதுன்ன கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகியோர் அடங்கிய ஆயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
எனினும் அர்ச்சுனா நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பது மற்றும் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்கப் போவதில்லை என்று நீதிமன்ற ஆயம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த மனுவை ஓகஸ்ட் முதலாம் ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பகிரவும்...