அரச அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை – ஹரிணி அமரசூரிய

தங்களது அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு எதிராக முன்வைக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணையின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மல்வத்து – அஸ்கிரிய பீடத்தினரைச் சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ், உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பல அதிகாரிகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
தற்போது, வெளியிலிருந்து அரச அதிகாரிகளைக் கொண்டு வருவதற்கு முடியாது.
எனவே, தற்போதுள்ள அதிகாரிகளைக் கொண்டு, முகாமை செய்து நாம் கடமைகளை முன்னெடுத்து வருகிறோம்.
எவ்வாறாயினும், குறித்த அதிகாரிகள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பகிரவும்...