Main Menu

அரசியல் பிரச்சினையைத் தீர்க்காமல் ஒருபோதும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது – சத்தியலிங்கம் எம்.பி

நாட்டில் உள்ள அரசியல் பிரச்சினையைத் தீர்க்காமல் ஒருபோதும் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்தமைக்கு வெறுமனே ஊழல் மாத்திரமே காரணம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

எனவே இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய முக்கிய பொறுப்பு தற்போதைய அரசாங்கத்துக்கு உள்ளதாகவும் பத்மநாதன் சத்தியலிங்கம் கூறினார்.

தற்போது நாட்டின் பொருளாதார பிரச்சினையைத் தான் முதலில் தீர்க்க வேண்டும் எனவும் அதற்குரிய வழிவகைகளையே மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் கூறியிருக்கின்றமை பாரதூரமான விடயம் என சத்தியலிங்கம் சுட்டிக்காட்டினார்.

அரசியல் தீர்வு,புதிய அரசியல் யாப்பு தொடர்பில் இப்போதைக்கு சிந்திக்கவில்லை எனக் கூறுவதும் பாரதூரமான விடயம் எனக் குறிப்பிட்டார்.

இன்றைய தினம் சூரியன் வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.

பகிரவும்...