அரசியல் நோக்கத்துடனேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த இரண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்- விஜித ஹேரத்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில வெளியிட்டுள்ள அறிக்கைகள் உட்பட உயிர்த்தஞாயிறுதாக்குதல் விசாரணை அறிக்கைகள் குறித்து அரசாங்கம் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
இரண்டு அறிக்கைகளும் அரசியல் நோக்கத்துடனேயே வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
அரசாங்கம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுஇவிசாரணைகள் பூர்த்தியான பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதற்காக புதிய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்கவேண்டுமா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை.எனினும் விசாரணைகளின் பின்னர் இது குறித்து தீர்மானிக்கப்படும்.
2019 இல் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவும்இ உயர்நீதிமன்றமும் இரண்டு சிஐடி உத்தியோகத்தர்கள் மீது எந்த குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை.
உயர்நீதிமன்றமும் ஆணைக்குழுவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட பல அரசாங்க அதிகாரிகள் தாக்குதலை தடுக்க தவறியமையால் குற்றவாளிகள் என தெரிவித்திருந்தது.
உரிய புலனாய்வு தகவல்கள் கிடைத்த போதிலும் அவர்கள் அதனை தடுத்து நிறுத்த தவறினார்கள் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அவர்களை நஷ்ட ஈட்டை செலுத்துவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததுஇஆனால் எந்த இடத்திலும் ஷானி அபயசேகரவும் ரவி செனிவிரட்ணவும் குற்றவாளிகள் என தெரிவிக்கவில்லை.
பகிரவும்...