Main Menu

அரசாங்கத்தினால் கையகப்படுத்தப் பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை முன்னெடுப்பு

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு அமைச்சுக்கள் மட்டத்திலான குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விஜித ஹேரத் இதனை தெரிவித்திருந்தார்.

இது குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவிகையில் ” காணி விடுவிப்பு தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்காக அமைச்சுக்கள் மட்ட குழுவொன்றை ஸ்தாபித்துள்ளோம்.
குறித்த குழுவினர் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும் மொனராகலை, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் விவசாய நடவடிக்கைக்கான காணிகளை வழங்குவதற்கும், சில பகுதிகளில் குடியேற்றத்துக்கான காணிகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இந்த காணிகளை விடுவிப்பதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது. எனவே வனஜீவராசிகள் மற்றும் வனவள திணைக்களம்,
மகாவலி அதிகாரபை உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் கலந்துரையாடவுள்ளோம். அத்துடன் நிரந்தர குடியிருப்பு அமைத்தல், வர்த்தகம் மற்றும் விவசாயம் போன்ற நடவடிக்கைகளுக்கு காணிகளை வழங்கும் நோக்கில் அமைச்சுக்களுக்கு இடையிலான குழுவொன்றை நியமிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது” இவ்வாறு விஜித ஹேரத்  தெரிவித்துள்ளார்.

பகிரவும்...
0Shares