Main Menu

அமெரிக்க ஜனாதிபதியுடன் இலங்கை ஜனாதிபதி சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் 80வது பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொண்ட உலக தலைவர்களுக்கு நிவ்யோர்க்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விசேட விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் கலந்து கொண்டார்.

இதன்போது அமெரிக்க ஜனாதிபதியுடன் சுமுக கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வு கடந்த 23 ஆம் திகதி Lotte New York Palace விடுதியில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது ஜப்பானுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...