அமெரிக்காவுடன் உடன்பட்ட விடயங்கள் குறித்து அமைச்சர் அனில் ஜயந்த விளக்கம்

அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் தொடர்பான கலந்துரையாடல்கள் இன்னும் முடிவடையாததால், அமெரிக்காவுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட விபரங்களை வெளியிட முடியாது என்று தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று (17) நடைபெற்ற “அத தெரண Big Focus” நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதற்கு ஒரு தொழில்நுட்ப ரீதியாக தீர்வு உள்ளது. இது தொடர்பான இரண்டு நாடுகள் மட்டுமே அந்த விடயங்களை முன்வைக்கின்றன. அந்த இரண்டு நாடுகளும் மட்டுமே இறுதி ஒப்பந்தத்தை எட்டின. விவாதிக்கப்படும் விடயங்களில் இறுதி உடன்பாடு எட்டப்படாமல் அவற்றை வௌியிடக் கூடாது. ராஜதந்திரம் என்பது இதுதான். நாம் அனைவரும் சேர்ந்து அதை “non disclosure exclusivity” என்று அழைக்கிறோம். அப்படியானால், ஒப்பந்தம் எட்டப்பட்ட பிறகுதான் இது முழுமையான ராஜதந்திர செயற்பாடாக இருக்கும். அமெரிக்கா இப்போது 1,161 பொருட்களுக்காக எங்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ளது. நாங்கள் அங்கு ஏற்றுமதி செய்கிறோம். இந்த 1,161 பொருட்களில் 42 விவசாய பொருட்களாகும். இவற்றில் ஆடைகளும் உள்ளடங்கும். அவர்கள் 80% வீதமான பொருட்களுக்கு 0% தருவதாக ஒப்புக்கொண்டுள்ளனர், அதாவது வகையின் 70% முதல் 80% வீதமானவை. அதற்கு முடிவு எட்டப்படாததால் நாங்கள் ஒவ்வொன்றாகச் சொல்லவில்லை. ஏற்றுமதி செய்யும்போது 0% கொடுங்கள்.
நாங்கள் அவர்களிடமிருந்து இறக்குமதி செய்தாலும் அவர்களால் எங்களுக்கு 0% வீதம் தர முடியுமா என்பது பற்றி நாங்கள் கலந்துரையாடி வருகிறோம். இறக்குமதியைப் பொறுத்தவரை, அது சுமார் 300 மில்லியன் என்பதால், தற்போது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 0% முதல் 20% வீத வரை வரி வரம்பு உள்ளது, எனவே அவற்றில் சிலவற்றை நாம் சிறிது குறைத்தால், அரசாங்கத்திற்கு பெரிய வருமான இழப்பு ஏற்படாது.
இதற்கிடையில், அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரிகளை மேலும் குறைப்பது குறித்து கலந்துரையாடலை மேற்கொள்ள இலங்கையின் பிரதிநிதிகள் குழு நாளை (18) அமெரிக்கா செல்லவுள்ளது.
பகிரவும்...