அமெரிக்காவுக்கு சேவை இரத்து! – எயார் பிரான்ஸ் அறிவிப்பு
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்து டுபாய் நகரத்துக்கான விமானங்களை இரத்துச் செய்துள்ளதாக எயார் பிரான்ஸ் அறிவித்துள்ள நிலையில், தற்போது அமெரிக்காவுக்குமான விமான சேவைகளை இரத்துச் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நிலவும் அதிகப்படியான குளிர் காரணமாக விமான சேவைகள் இரத்துச் செய்யப்படுள்ளன.
அமெரிக்காவின் கிழக்கு மாநிலங்களில் -45°C வரையான மிக மோசமான குளிர் நிலவி வருகிறது. பனிப்பொழிவுக்குள் கட்டிடங்கள் சிக்கி வீதிகள் மூழ்கி, விமான நிலையங்களும் மூழ்கியுள்ளன. கிட்டத்தட்ட அவசரகால நிலையில் அங்கு நிலவரம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதை அடுத்தே, எயார் பிரான்ஸ் இதனை அறிவித்துள்ளது. நியூயோர்க்கின் JFK மற்றும் Newark போன்ற விமான நிலையங்களுக்கும், வாஷிங்டனின் IAD விமான நிலையத்துக்கும், raleigh-durham நகர விமான நிலையத்துக்கும் சேவைகள் இரத்துச் செய்யப்படுவதாக எயார் பிரான்ஸ் அறிவித்துள்ளது.
