Main Menu

அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவு அறிக்கையை தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் – தேர்தல் ஆணையாளர் நாயகம்

தேர்தல் முடிவுகள் வெளியாகி 21 நாட்களுக்குள் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவு அறிக்கையை தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம்  சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று (16) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காலக்கெடு முடிந்த பிறகும் செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக ஏற்கனவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதே போன்று பொதுத் தேர்தலிலும் செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...
0Shares