Main Menu

அந்தியேட்டி கிரியை ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் அன்னாரது 60வது பிறந்த நாளும் – அமரர். உருத்திரமூர்த்தி முருகையா ஜெயக்குமார் (19/11/2025)

தாயகத்தில் அளவெட்டியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Fontainebleau நகரை வதிவிடமாகவும் கொண்டு இருந்த அமரர் உருத்திரமூர்த்தி முருகையா ஜெயக்குமார் அவர்களின் அந்தியேட்டி கிரியையும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் 19ம் திகதி நவம்பர் மாதம் புதன் கிழமை அன்னாரின் இல்லத்தில் அனுஷ்டிக்கின்றார்கள்.

இன்று அமரர் உருத்திரமூர்த்தி முருகையா ஜெயக்குமார் அவர்களின் அந்தியேட்டி கிரியையிலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் அன்பு மனைவி சித்திரா (TRT அன்பு நேயர்) அன்பு பிள்ளைகள் தனுஜா, சித்திரகுமார், சகோதரங்கள் ரவி வர்மன், பரந்தாமன், பிரேமாவதி (பிரான்ஸ்) அருந்தவகுமார் (தாயகம் ) ஜீவசங்கர் (தாயகம்) மற்றும் உற்றார்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் இணைந்து பிரார்த்திக்கின்றார்கள் .

இன்று இடம் பெறும் அந்தியேட்டி கிரியை ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் TRTதமிழ் ஒலி குடும்பமும் இணைந்து கொள்கிறது.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் தனுஜா, சித்திர குமார்.

அவர்களுக்கும் எமது நன்றி.

பகிரவும்...