Main Menu

அநுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் காயம்

அநுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

திரப்பனை பகுதியில் இன்று சனிக்கிழமை (19) காலை லொறியொன்றுடன் வேனொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெகிராவையிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற வானில் 13 பேர் பயணித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்கைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் திரப்பனை போக்குவரத்து பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

பகிரவும்...