விடுதலைப் புலிகளின் சீருடையுடன் கூடிய எலும்புக்கூடு மீட்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணி
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் 681வது படை தலைமையகத்துக்கு அருகில் உள்ள காணியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்ட இடத்தில், நீதிமன்ற அனுமதியுடன் தற்போது அகழ்வுப் பணி இடம்பெற்று வருவதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ் லெனின்குமார் முன்னிலையில் இந்த பணி இடம்பெற்று வருகின்றது.
அங்கு தடயவியல் பிரிவினரும் பிரசன்னமாகியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 17ஆம் திகதி குறித்த பகுதியில் குழி ஒன்று தோண்டப்பட்ட போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...