வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணிகளை இவ்வார இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டம்
80 வீத வாக்குச்சீட்டுகள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.விசேட பாதுகாப்புடன் அவை அனுப்பி வைக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணிகளை இவ்வார இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் இந்நாட்களில் முன்னெடுக்கப்படுகின்றன.