Main Menu

யுக்ரேனுக்கான உதவிகள் ஒருபோதும் நிறுத்தப்படாது – பிரித்தானியப் பிரதமர்

யுக்ரேனுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உதவிகளை பிரித்தானியா ஒரு போதும் நிறுத்தாது என பிரித்தானியப் பிரதமர் சேர் கீர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.
பிரதமராகப் பதவியேற்று முதல் முறையாக யுக்ரேனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரஸ்யாவுடனான போரில் உயிரிழந்த யுக்ரேனியர்களுக்கும் இதன்போது அவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
யுக்ரேனுடனான 100 ஆண்டுகால உறவை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பகிரவும்...
0Shares