மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தம்
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து, இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு முழுமையாக இடைநிறுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர், தடுப்பூசி அட்டையின்றி பொது இடங்களில் பிரவேசிப்பதற்கும் பொதுமக்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றமையினால், நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்கள் மேலும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படுமெனவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.