பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி உதவிகளுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலைமையே நாட்டில் இருக்கிறது – சுமந்திரன்
நாளாந்தம் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி உதவிகளுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலைமையே நாட்டில் இருக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஜனாதிபதி தமது உரையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது இந்தியாவிலிருந்து 500 மில்லியன் டொலர் உதவி கிடைத்திருப்பதாகச் செய்தி வெளியானது.
இந்த உதவியானது இலங்கையின் பிச்சைப் பாத்திரத்தில் விழுந்துள்ள மற்றுமொரு பொதியாகும்.
நாளாந்தம் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி உதவிகளுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலைமையே நாட்டில் இருக்கிறது.
இவ்வாறான சூழ்நிலையை நாடு சந்தித்திருக்கும் போது அதற்கான தீர்வு எதுவும் உள்ளடங்காத உரையாகவே ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை அமைந்திருந்தது.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பற்றிப் பேசும் போது, தாம் உரையை ஆரம்பித்த விதத்தை மறந்து, அந்த மக்களை அவமதிக்கும் வகையில் உரையாற்றினார்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.