பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானோர் – பரிந்துரைகளை முன்வைக்க குழு நியமனம்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை அல்லது விடுதலை அளிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை முன்வைக்க ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த சபை நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையில் மூவரடங்கிய இந்த ஆலோசனை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...